கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
கலசப்பாக்கம் சொரக்கொளத்தூர் காப்புக் காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி நார்த்தாம் பூண்டி கிராமத்திற்குள் புகுந்தது.
கலசப்பாக்கம்,
கலசப்பாக்கம் சொரக்கொளத்தூர் காப்புக் காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி நார்த்தாம் பூண்டி கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது மான் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்தது.
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர்கள் அந்த மானை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.