மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறையினர் காந்திநகர் பகுதியில் சோதனை நடத்தினர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் திருவேங்கிடம் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை காந்திநகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வெள்ளூர் கமண்டல நதியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் சுப்பிரமணி, வெங்கடேசன், ராஜ்குமார், மேகநாதன், கிருஷ்ணன், தங்கராஜ் ஆகிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க செய்யாறு உதவி கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.