மகனின் வங்கிக்கணக்கில் பணம் போட சென்ற ஆட்டோ டிரைவரிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்
மகனின் வங்கிக்கணக்கில் பணம் போடச்சென்ற ஆட்டோ டிரைவரிடம் மர்ம ஆசாமி நூதன முறையில் ரூ.49 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளார்.
மும்பை,
மகனின் வங்கிக்கணக்கில் பணம் போடச்சென்ற ஆட்டோ டிரைவரிடம் மர்ம ஆசாமி நூதன முறையில் ரூ.49 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளார்.
பணம் செலுத்தும் எந்திரம்தானே மிராரோடு பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்(வயது64). ஆட்டோ டிரைவர். இவரது மகன் வெளியூரில் தங்கி படித்து வருகிறார். அவருக்கு ரூ.49 ஆயிரம் கல்லூரி கட்டணம் கட்டவேண்டி இருந்தது. இதையடுத்து கிரிஷ் மகனின் வங்கிக்கணக்கில் அந்த பணத்தை போட விரும்பினார். எனவே அவர் சம்பவத்தன்று வில்லேபார்லே, மித்திபாய் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அங்குள்ள பணம் செலுத்தும் எந்திரம் வழியாக மகனின் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்ப முயன்றார். ஆனால் அவருக்கு பணத்தை அனுப்ப தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தனக்கு எந்திரம் மூலம் பணம் அனுப்பும் முறை நன்றாக தெரியும் என கூறி, ஆட்டோ டிரைவரிடம் இருந்து பணத்தை வாங்கினார். பின்னர் அவர் கண் முன்பே பணத்தை அனுப்பினார். இந்தநிலையில் 3 மணிநேரம் ஆன பிறகும் அவரது மகனின் வங்கி கணக்கிற்கு பணம் போகவில்லை.
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சுஇதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆட்டோ டிரைவர் இது குறித்து வில்லேபார்லே போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மர்மநபர் ஆட்டோ டிரைவரின் மகனின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பாமல் வேறு ஒருவருக்கு பணத்தை அனுப்பியது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நூதன முறையில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.49 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.