காரில் கடத்தி 3 பேரால் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட கொடூரம் சார்க்கோப்பில் சம்பவம்

சார்க்கோப்பில், காரில் கடத்தி 3 பேரால் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-07-07 21:39 GMT

மும்பை,

சார்க்கோப்பில், காரில் கடத்தி 3 பேரால் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மாணவி கடத்தி கற்பழிப்பு

மும்பை சார்க்கோப்பை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டு அருகே உள்ள கல்லூரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் 3 பேர் இருந்தனர். திடீரென அவர்கள் மாணவியை காருக்குள் இழுத்து போட்டு கடத்தி சென்றனர்.

மலாடு மத் பகுதிக்கு கொண்டு சென்று காரில் வைத்தே 3 பேரும் அந்த மாணவியை கொடூரமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் சார்க்கோப்பிற்கு வந்த ஆசாமிகள் மாணவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றனர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி அழுதபடி கூச்சலிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த காரை மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி சார்க்கோப் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியை கடத்திய ஆசாமிகளில் ஒருவர் அவருக்கு நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது. மாணவியை கடத்தி கற்பழித்த 3 பேரையும் அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காரில் கடத்தி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் சார்க்கோப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்