திருத்தணி அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

திருத்தணியை அடுத்த சின்னகடம்பூரை விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு.

Update: 2017-07-04 22:58 GMT
திருத்தணி, 

திருத்தணியை அடுத்த சின்னகடம்பூரை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவரது மனைவி நதியா. நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது அவர்களது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்து 500 மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து குமார் திருத்தணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்