ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னை மட்டைகளை தீ வைத்து போராட்டம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னை மட்டைகளை தீ வைத்து எரித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-04 23:00 GMT
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 84-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தென்னை மட்டைகளை தீ வைத்து எரித்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்