நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை டவுனில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் வருகிற 7–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர் எந்தவித தடையில்லாமல் ரதவீதிகளில் சென்று வருவதற்காக ரதவீதிகளில் உள்ள ஆக்கிரம

Update: 2017-07-04 21:00 GMT

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் வருகிற 7–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர் எந்தவித தடையில்லாமல் ரதவீதிகளில் சென்று வருவதற்காக ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் நாராயண நாயர் ஆகியோர் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் சாமுவேல்செல்வராஜ் தலைமையில் பொறியாளர்கள் முருகேசன், அருள், சங்கரசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் நேற்று காலையில் டவுன் 4 ரதவீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். இதற்கு சில கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்