கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ரப்பர் தொழிலாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகாண நிர்வாகம் இதுவரை முன்வரவில்லை எனத்தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இன்னும் காலதாமதம் இன்றி கோரிக்கைகளுக்கு தீர்வுகாண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொழிலாளர் துறையும், வனத்துறையும் இணைந்து அமைச்சர்கள் தலைமையில் பேசி தீர்வுகாண கோரியும் அரசு ரப்பர் கழக அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை அனைத்து அரசு ரப்பர் கழக கோட்டங்களில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் அரசு ரப்பர் கழக அனைத்து தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வல்சகுமார், தொ.மு.ச. மாவட்ட தலைவர் இளங்கோ, பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் தோட்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஞானதாஸ், எம்.எல்.எப். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பால்ராஜ், ஐ.என்.டி.யூ.சி. முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்ட முடிவில் முதல்–அமைச்சருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மூலமாக வழங்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் அந்தந்த தொழிற்சங்க கொடிகளை கையில் பிடித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆறுகாணி, கோதையாறு, குற்றியார், மணலோடை, கீரிப்பாறை போன்ற கோட்டங்களைச் சேர்ந்த அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பங்கேற்றனர்.