கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி வல்லராமபுரம், தளவாய்புரம், மாயம்பாறை, புதுகிராமம், பட்டாடைகட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் சங்கரன்கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே நடுவக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி நேற்று காலை ம.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் பிரமுகர்கள் முத்துப்பாண்டியன், சுப்பிரமணியன், ராஜ்குமார் உள்ளிட்ட நடுவக்குறிச்சி கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை, வருவாய் ஆய்வாளர் ஜெயமுருகன், கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் ஆகியோரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.