அரசின் கேளிக்கை வரி விதிப்பை கண்டித்து 38 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை கண்டித்து 38 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.
தர்மபுரி,
மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது.
சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம் என மொத்தம் 58 சதவீதம் வரி கட்டவேண்டிய நிலை இருப்பதால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் இந்த கேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களை மூடுவது என தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன. இதன் மூலம் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 38 சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரியில் 6 தியேட்டர்களும், அரூரில் 3 தியேட்டர்களும், காரிமங்கலத்தில் 3 தியேட்டர்களும், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், பாலக்கோடு, கம்பைநல்லூர், பொம்மிடி ஆகிய ஊர்களில் தலா ஒரு தியேட்டரும் என மொத்தம் 18 தியேட்டர்கள் செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் 6 தியேட்டர்களும், ஓசூரில் 4 தியேட்டர்களும், காவேரிப்பட்டணத்தில் 4 தியேட்டர்களும், ஊத்தங்கரையில் 3 தியேட்டர்களும், பர்கூர், கெலமங்கலம், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் தலா ஒரு தியேட்டரும் என மொத்தம் 20 தியேட்டர்களும் இயங்கி வருகிறது. இந்த தியேட்டர்கள் நேற்று முதல் மூடப்பட்டதால் இதனை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.