சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ரெயில்வே போலீஸ்காரர் சாவு

சேலம்,
ஓமலூர் அருகே கோட்டகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37). இவர், ஈரோடு ரெயில்வே போலீசில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இளவரசி என்ற மனைவியும், சுபாஷ் கிருஷ்ணா (3) என்ற மகனும் உள்ளனர். இளவரசி கடந்த 3 மாதமாக சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இதனால் கடந்த 1-ந் தேதி மதியம் உத்தமசோழபுரத்தில் உள்ள மனைவி இளவரசியை பார்த்துவிட்டு போலீஸ்காரர் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அவரை உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில், பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே போலீஸ்காரர் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.