‘ஜெயலலிதா ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம்’ ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

ஜெயலலிதா ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல் –அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

Update: 2017-07-03 23:15 GMT

திருச்சி,

ஜெயலலிதா ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதல் –அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, பூனாட்சி, மருத ராஜா எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினவேலு, மாநகராட்சி முன்னாள் கோட்ட தலைவர் மனோகரன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் ‘அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு (புரட்சி தலைவி அம்மா அணி)தான் கிடைக்கும். ஜெயலலிதா ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது என்னை வீட்டு காவலில் அடைத்து வைத்து இருந்ததாக ம. நடராசன் கூறி இருப்பது வடி கட்டிய பொய்’ என்றார்.

வரவேற்பு முடிந்த பின்னர் ஓ. பன்னீர்செல்வம் மணப்பாறைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்