10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை

கடற்படையில் சமையல்காரர் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2017-07-03 14:30 GMT
இந்திய கடற்படையில் “கோர்ஸ் காமென்சிங் - எம்.ஆர்.-2018” பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி நுழைவின் அடிப்படையில் திரு மணம் ஆகாத ஆண் இளைஞர்கள் சமையல்காரர், ஏவல் பணியாள், சுகாதார ஊழியர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப் படுகிறார்கள். தேவையான எண்ணிக்கையில் தகுதியானவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருப்பதுடன், கீழ்க்காணும் தகுதியை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-4-1997 மற்றும் 31-3-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்த வர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

மெட்ரிக்குலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், உயரத்திற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/36 மற்றும் 6/36 என்ற அளவுக்குள்ளும் கண்ணாடியுடன் 6.9 மற்றும் 6/12 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 15 வார காலம் பயிற்சி பெற்று பின்னர் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவை சீப் பெட்டி ஆபீசர் பணி வரை பதவி உயர்வு பெறத்தக்க பணியிடங்களாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-7-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்