விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது.

Update: 2017-07-03 13:45 GMT
பொதுத்துறை நிறுவனமான இது மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது கொல்கத்தா விமான நிலைய ஆணைய நிறுவனம் ஜூனியர் அசிஸ்டன்ட் (தீயணைப்பு) பணிக்கு விண்ணப்பங்கள் கோரி உள்ளது.

மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 13 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 17 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 19 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

விண்ணப்பதாரர்கள் 30-6-2017-ந் தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு போன்ற பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். 12-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

தேர்வு செய்யும் முறை:

கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 19-7-2017-ந் தேதியாகும். ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்டணம் செலுத்த கடைசி நாள் 21-7-2017-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aai.aero என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்