படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரவவிடுவோம்: மாணவிக்கு மிரட்டல் 2 வாலிபர்கள் கைது
செல்போனில் உள்ள மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரவவிடுவோம் என்று கூறி மருத்துவ மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
மதுரையை சேர்ந்தவர் அஸ்வந்த் (வயது 19). இவர் புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் பிள்ளைச்சாவடி கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அஸ்வந்தையும், அவருடன் இருந்த மாணவியையும் மிரட்டி, மாணவி அணிந்திருந்த 10 கிராம் தங்க நகைகளையும், அஸ்வந்த் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும் பறித்துச்சென்றனர். இது குறித்து காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் அஸ்வந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்
அஸ்வந்த் தனது செல்போனில் மாணவியின் புகைப் படத்தையும், அவரது செல்போன் எண்ணையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை பயன்படுத்தி அந்த வாலிபர்கள் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் இதுபற்றி அஸ்வந்தும், அந்த மாணவியும் போலீசில் கூறவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டனர். பணம் தராவிட்டால், மார்பிங் முறையில் உனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரவ விட்டுவிடுவோம் என மிரட்டினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அஸ்வந்திடம் கூறினார்.
2 வாலிபர்கள் கைது
இதுபற்றி காலாப்பட்டு போலீசில் அஸ்வந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பணம் கேட்டு மிரட்டிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அவர்கள் லாஸ்பேட்டை பாரதிநகரை சேர்ந்த துரைகணேசன் மகன் தரணிதரன் (26), முத்தியால்பேட்டை கணேசன் நகரை சேர்ந்த இஸ்மாயில் மகன் முகமது ஷாகுல் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.