உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி கோட்டையை நோக்கி ஊர்வலம்
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்வது என பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் வினோஜ் ப. செல்வம் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் கவுதம் வரவேற்று பேசினார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற ஆகஸ்டு 7-ந்தேதி சென்னையில் கோட்டையை நோக்கி மாபெரும் ஊர்வலம் நடத்துவது. இந்த ஊர்வலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 40 ஆயிரம் இளைஞர்களை திரட்டி செல்வது.
தீர்மானத்தை விளக்கி மாநில தலைவர் வினோஜ் ப. செல்வம் நிருபர்களிடம் கூறுகையில் ‘கோட்டையை நோக்கி நடைபெற உள்ள இந்த ஊர்வலத்தில் பா.ஜ. இளைஞர் அணி அகில இந்திய தலைவர் பூனம் மகாஜன் எம்.பி, தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்’ என்றார்.
மாநில பொதுச்செயலாளர்கள் வசந்தராஜன், மாரிசக்கரவர்த்தி, கோபிநாத் கணேசன், குரு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.