கேளம்பாக்கம் அருகே மதுக்கடை கட்டிடம் முற்றுகை

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மதுக்கடைக்கு

Update: 2017-07-02 22:30 GMT

திருப்போரூர்,

எதிர்ப்பு தெரிவித்து 50–க்கும் மேற்பட்டவர்கள் மதுக்கடை கட்டிடத்தை முற்றுகையிட்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது:–

நாவலூர் பகுதியில் இருந்து தாழம்பூர் செல்லும் பிரதான சாலையில் 3 கல்லூரிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் தினந்தோறும் இந்த சாலை வழியாக ஏராளமானோர் செல்கின்றனர். மதுக்கடை திறந்தால் பொதுமக்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இங்கு மதுக்கடையை திறக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்