சிறையில் பெண் கைதி கொலை: ஜெயிலர், 5 காவலர்கள் கைது
மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி மஞ்சுளா கடந்த வாரம் சிறை காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி மஞ்சுளா கடந்த வாரம் சிறை காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் மனிஷா, சிறை காவலர்கள் பிந்து, வாசிமா சேக், சீத்தல், சுரேக்கா, ஆர்த்தி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இவர்கள் 6 பேரும் நேற்று மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த தகவலை மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.