அம்மா தமிழ் மென்பொருள் குறுந்தகடு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் வெளியிட்டார்
தர்மபுரியில் அம்மா தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டார்.
தர்மபுரி,
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அம்மா மென் தமிழ்ச்சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் பயிலரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயராகவன் தலைமை தாங்கி குறுந்தகட்டை வெளியிட்டார். இதனை கலெக்டர் விவேகானந்தன் பெற்று கொண்டார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயராகவன் பேசுகையில், தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையின்படி அனைத்து அரசு அலுவலகங்களில் செயல்பாடுகள் முழுமையாக தமிழில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த மென் பொருள் குறுந்தகட்டை அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த மென் பொருள் குறுந்தகடு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மென் பொருள் குறுந்தகடு மூலம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சிறந்து விளங்கும்
கலெக்டர் விவேகானந்தன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழ் மென் பொருள் குறுந்தகடு இலவசமாக வழங்கப்படும். இதற்காக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழியில் அரசு கோப்புகள் தயாரித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தமிழ் மென்பொருளை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் சிறப்பான கோப்புகளை தயாரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியில் கோப்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் தர்மபுரி மாவட்டம் மேலும் சிறந்து விளங்கும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மொழி பெயர்ப்பு துறை இயக்குனர் அருள், சென்னை பல்கலை கழக தமிழ்த்துறை மற்றும் மொழியியல் துறை பேராசிரியர் தெய்வசுந்தரம், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் கோவிந்தராசு நன்றி கூறினார்.