குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

திருப்பூர் 3–வது வார்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

Update: 2017-07-01 22:00 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 3–வது வார்டுக்குட்பட்ட தியாகி குமரன் காலனியில் 15–க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. அங்குள்ள சில வீதிகளுக்கு கடந்த சில நாட்களாக மாநகராட்சி குடிநீர் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் அவர்கள் வேலைநிறுத்தம் முடிந்து பணிக்கு திரும்பியும் அந்த பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1–வது மண்டல அலுவலகத்திற்கு செல்வதற்காக அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த குழாய் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அந்த பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் லாரி மூலமாகவும் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மண்டல அலுவலகத்திற்கு செல்வதை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்