போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-07-01 22:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகளான ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, ராஜாஜி சாலை, தேரடி, பஜார் வீதி, செங்குன்றம் சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு திருவள்ளூர் நகரில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்