நாகையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகையில் சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-06-30 22:30 GMT

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைவர் ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி.மணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சிவனருட்செல்வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பொதுவினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும். கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், தின கூலியை ரூ.300 ஆகவும் உயர்த்த வேண்டும். தொழிலாளர்களின் 15 அடிப்படை சட்டங்களை ஒரே தொகுப்பாக சுருக்கிடும் முயற்சியினை கைவிடவேண்டும். அனைவருக்கும் கண்ணியமான சமூக பாதுகாப்பை உத்தரவாத படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த வசந்தி, அரசு விரைவு போக்குவரத்துகழக சி.ஐ.டி.யூ. செயலாளர் சண்முகசுந்தரம், சுமைப்பணி மாவட்ட செயலாளர் முனியாண்டி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழுவை சேர்ந்த ரவீந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்