காரைக்குடியில் ஆய்வுக்காக சென்ற சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டார்

காரைக்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக வர்த்தக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2017-06-16 21:30 GMT

காரைக்குடி

காரைக்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக வர்த்தக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 5 விளக்கு பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் சோதனை செய்தபோது அந்தக் கடையின் உரிமையாளர் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரனிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம். மேலும் நகராட்சி பணியாளர்களை ஆபாசமாக பேசினாராம்.

இது குறித்து நகராட்சி பணியாளர்கள் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தனர். சுகாதார ஆய்வாளரை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஒட்டு மொத்த நகராட்சி பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்