சென்னையில் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யக்கோரி வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழும்பினார்கள்.
ஆர்ப்பாட்டம் குறித்து பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரேணுகா நிருபர்களிடம் கூறுகையில், ‘அகில உலக வீட்டு வேலை தொழிலாளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய- மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்’ என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அமைப்பின் மாநில தலைவர் வளர்மதி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.