நடத்தையில் சந்தேகம் 9 பிள்ளைகளின் தாய் குத்திக்கொலை கணவர் கைது
நடத்தையில் சந்தேகம் காரணமாக 9 பிள்ளைகளின் தாய் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
நடத்தையில் சந்தேகம் காரணமாக 9 பிள்ளைகளின் தாய் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
நடத்தையில் சந்தேகம்மும்பை கார் மேற்கு ராம்மந்திர் சாலை குடிசை பகுதியை சேர்ந்தவர் அக்தர்கான் (வயது50). இவரது மனைவி பாத்திமா (45). இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள். இந்த நிலையில், பாத்திமாவின் நடத்தையில் அக்தர்கானுக்கு சந்தேகம் உண்டானது. அந்த பகுதியை சேர்ந்த வேறொரு ஆணுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக கருதினார்.
இதன் காரணமாக அடிக்கடி அவர் மனைவியிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார். சம்பவத்தன்று நள்ளிரவு இருவருக்கும் இடையே பயங்கர சண்டை உண்டானது.
குத்தி கொலைஇதனால் கடும் கோபம் அடைந்த அக்தர்கான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பாத்திமா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அக்தர்கானை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.