விவசாய நிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் போராட்டம்
திருவாரூர் அருகே ஆத்தூரில் விவசாய நிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக்கடைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட தரைபாலத்தில் இருந்த சிமெண்டு குழாயை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக்கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக வேறு இடங்களில் புதிய கடைகளை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பெரும்பாலான டாஸ்மாக்கடைகள் குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதிகளில் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில திருவாரூர் அருகே ஆத்தூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக்கடை கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி பூமி பூஜை போடப்பட்டது. அப்போதே விவசாய நிலத்தில் டாஸ்மாக்கடையை திறக்க கூடாது என அப்பகுதி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு டாஸ்மாக்கடை திறக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
பரபரப்பு
ஆனால் இதற்கு மாறாக விவசாய நிலத்தில் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக்கடையை உடனே அகற்றக்கோரியும் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த திரளான ஆண், பெண்களும் ஒன்று திரண்டு நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக்கடைக்கு செல்வதற்காக வாய்க்காலில் குறுக்கே அமைக்கப்பட்ட தரைபாலத்தில் இருந்த சிமெண்டு குழாயை உடைத்து சேதப்படுத்தினர். அங்கு ஜெனரேட்டர் மூலம் டாஸ்மாக்கடைக்கு சென்ற மின்சார வயர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் சிலர் கற்களை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 3 மணிநேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருவாரூர் அருகே உள்ள கண்கொடுத்த வணிதம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.