ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட செயற்்குழு உறுப்பினர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர் பகத்சிங் மற்றும் உறுப்பினர்கள் ராஜேஷ், ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர் சங்கத்தினர் மற்றும் பள்ளி மாணவர்களும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.