தண்ணீர் தேடி கிராமத்துக்குள் வந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருச்சுழியை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றித் திரிகின்றன. இந்த சூழ்நிலையில் சில தினங்களாக காட்டுப் பகுதியில் குடிக்க தண்ணீரின்றி மான்கள் அதிகஅளவில் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன.
திருச்சுழி,
திருச்சுழியை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றித் திரிகின்றன. இந்த சூழ்நிலையில் சில தினங்களாக காட்டுப் பகுதியில் குடிக்க தண்ணீரின்றி மான்கள் அதிகஅளவில் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன. கிராம பகுதியில் நாய்களால் மான்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அதை மீறியும் தண்ணீர் குடிக்க ஊருக்குள் வரும் மான்களை கிராமத்தினர் காட்டுப் பகுதிக்கு துரத்தி விடுகின்றனர். இதே போன்று திருச்சுழி அருகே பொம்ம நாயக்கன்பட்டி கிராமத்துக்குள் தண்ணீர் குடிக்க வந்த மானை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக நாய்களிடமிருந்து மீட்டு மேலையூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் மானை ஒப்படைத்தனர்.