36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை நகரில் பஸ் நிலையம், கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகரில் பஸ் நிலையம், கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு பணியை விரிவுபடுத்தும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோகர்ணம், மாலையீடு, பெரியார் நகர், பால் பண்ணை ரவுண்டானா, மேட்டுப்பட்டி, டி.வி.எஸ் கார்னர் உள்ளிட்ட பகுதியில் 36 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான கட்டுப்பாட்டு அறை புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்பு பணியை நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.