கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

நாகர்கோவில்,
மார்த்தாண்டன்துறை பங்குத்தந்தை சேவியர் தலைமையில் மீன்பிடி சங்க மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், சி.ஐ.டி.யு.நிர்வாகி அந்தோணி மற்றும் சிலர் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் நேற்று ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் சுமார் 1600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம், கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளபடியால் கடல்சீற்றம் காரணத்தினால் வீடுகளும், சாலைகளும் பாதிக்கப்படுகிறது. கடலரிப்பால் இங்குள்ள ஆலயம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், சுமார் 2 ஆயிரம் மாணவ–மாணவிகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடமும், மீன்விற்பனைக்கூடமும் கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடுப்புச்சுவர் கட்டிதந்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும், நிரந்தர தீர்வாக இப்பகுதியில் தூண்டில் வளைவு ஒன்றும் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.