ஆட்டோவில் பெண் பயணி தவற விட்டார்: 25 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த டிரைவர்

சென்னையை அடுத்த நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 60).

Update: 2017-06-15 22:30 GMT

ஆலந்தூர்,

இவருடைய மனைவி வில்வகனி(56). கடந்த வாரம் இவர், மதுரைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் திரும்பி வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

அப்போது ஆட்டோவிலேயே தனது கைப்பையை தவற விட்டார். அதில் 25 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைக்கடிகாரம், ஏ.டி.எம்.கார்டுகள் இருந்தன. இதுபற்றி திருவான்மியூர் போலீசில் வில்வகனி புகார் செய்தார்.

இதற்கிடையில் நீலாங்கரை குமரகுரு அவென்யூவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவேங்கடம்(55) என்பவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது ஆட்டோவில் வந்த பெண் பயணி தனது கைப்பையை தவறவிட்டு சென்றுவிட்டதாக கூறி ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீசார், வில்வகனியை அழைத்து அவரது கைப்பையையும், அதில் இருந்த பொருட்களையும் ஒப்படைத்தனர். ஆட்டோவில் தவறவிட்ட 25 பவுன் நகை, பணம் உள்ளிட்டவைகளை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் திருவேங்கடத்துக்கு திருவான்மியூர் போலீசார் வெகுமதி வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்