ஓடும் ஆட்டோவில் பெண்ணை மானபங்கம் செய்து தள்ளிவிட்ட வழக்கில் 2 பேர் கைது

ஓடும் ஆட்டோவில் பட்டதாரி பெண்ணை மானபங்கம் செய்து தள்ளிவிடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-06-14 23:53 GMT
தானே,

ஓடும் ஆட்டோவில் பட்டதாரி பெண்ணை மானபங்கம் செய்து தள்ளிவிடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டதாரி பெண் மானபங்கம்

தானே பகுதியை சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் கடந்த வாரம் ஓடும் ஆட்டோவில் மானபங்கம் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தானேயை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் பெண்ணை மானபங்கம் செய்து ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டவர்கள் சிக்கவில்லை.

2 பேர் கைது

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி முதல் கணவனை காணவில்லை என ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி தானே வாக்ளே எஸ்டேட் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து காணாமல் போன ஆட்டோ டிரைவர் சந்தோசுக்கு(வயது38) இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதினர். எனவே போலீசார் அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் தானே மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சந்தோசும், அவரது நண்பர் லகுவும் (39) ஓடும் ஆட்டோவில் பட்டதாரி பெண்ணை மானபங்கம் செய்து தள்ளிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லகுவையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்