கார் மோதி விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி
முத்துப்பேட்டை அருகே கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார். மேலும், அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள தம்பிக்கோட்டை வடகாட்டை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அரவிந்த் (வயது18). இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர் அதே ஊரைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் அசோக் (18). இவர் அரவிந்த்துடன் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நண்பர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தம்பிக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அரவிந்த் ஓட்டி சென்றார். அப்போது கீழக்காடு மெயின் ரோட்டில் உள்ள தேங்காய்வாடி அருகில் சென்ற போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கல்லூரி மாணவர் பலி
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அரவிந்த், அசோக் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அசோக் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலை வீசிதேடி வருகின்றனர்.