அறந்தாங்கி, அன்னவாசலில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 82 பேர் கைது
சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நகரசெயலாளர் ஆனந்த் தலைமையில் தி.மு.க.வினர், அறந்தாங்கியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஆயிங்குடியில் நடந்த மறியலில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமையில் தி.மு.க.வினர் 45 பேர் இலுப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுட்டு கைது செய்யப்பட்ட 82 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.