காஞ்சீபுரம், திருவள்ளூரில் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கால்நடை பராமரிப்புத்துறையில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

Update: 2017-06-14 22:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கங்கத்தினர் சார்பில் நேற்று ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கல்நடை உதவி மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரில் உள்ள கால்நடை தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கால்நடை மருத்துவர் சங்க செயலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சரவணக்குமார், கால்நடை மருத்துவ சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்