நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட தலைவர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
நெல்லை,
நெல்லையில் காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட தலைவர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய மாவட்ட தலைவர்கள்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக எஸ்.கே.எம்.சிவகுமார், நெல்லை மேற்கு மாவட்ட தலைவராக பழனி நாடார் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட தலைவராக சங்கர பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், பழனி நாடார், சங்கரபாண்டியன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவர்களை வாழ்த்தி பேசினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர்கள் சிலைக்கு மரியாதை
இதை தொடர்ந்து மாவட்ட தலைவர்கள் கட்சி அலுவலகம் முன்பு உள்ள பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நெல்லை டவுனில் உள்ள காந்தி சிலை, சந்திப்பில் உள்ள பாரதியார், காமராஜர், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், வண்ணார்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன், பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்துக்கோன், கட்டபொம்மன், வ.உ.சி. ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி முன்னாள் தலைவர் வி.பி.துரை, வர்த்தக அணி வில்சன், பட்டதாரி அணி ஜெயக்குமார், பாளையங்கோட்டை வடக்கு வட்டார தலைவர் டியூக் துரைராஜ், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் தனசிங் பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தருவை காமராஜ், எம்.எம்.ராஜா, மகளிர் அணி தனித்தங்கம், சிவாஜி முத்துக்குமார், ராஜேஷ், ராஜகோபால், வக்கீல்கள் சிவசுப்பிரமணியன், மரியகுழந்தை, ராமேசுவரன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.