கோவில்பட்டி–ஏரலில், மறியலில் ஈடுபட்ட 122 தி.மு.க.வினர் கைது

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று கோவில்பட்டி, ஏரலில் மறியலில் ஈடுபட்ட 122 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-14 20:30 GMT
கோவில்பட்டி,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று கோவில்பட்டி, ஏரலில் மறியலில் ஈடுபட்ட 122 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி

சென்னையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று மாலையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், நகர செயலாளர் கருணாநிதி, அவை தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்ன பாண்டியன், சின்ன மாரிமுத்து, சண்முகையா, காசிவிசுவநாதன், மகராஜன், மாணவர் அணி தாமோதர கண்ணன், கணேசன், இளைஞர் அணி வினோத்குமார், அய்யாத்துரை, தொண்டர் அணி குமார், மகளிர் அணி விஜயலட்சுமி, மகளிர் தொண்டர் அணி இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 102 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், மேற்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏரல்

ஏரல் காந்தி சிலை அருகில் நேற்று தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் பார்த்தீபன் (ஏரல்), வரதராஜ் ஸ்டாலின் (சாயர்புரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 20 பேரை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலைமையில் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்