கடையம் யூனியன் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கடையம் யூனியன் அலுவலகத்தில், குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கடையம்,

முற்றுகை போராட்டம்
நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த கட்டேறிப்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. 10 ஆயிரம், 15 ஆயிரம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டிகள் மூலமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடும் வறட்சி காரணமாக ராமநதி ஆற்றில் உறை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் இப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் நேற்று கடையம் யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அவர்களிடம் கடையம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், ரெயில்வே கேட்டுக்கு தென்புறம் உள்ள ஆழ்குழாய் கிணறு தூர்வாரப்பட்டும் இயங்கவில்லை. ஊரில் வடக்கு தங்கம்மன் கோவில் பக்கம் உள்ள போர்வெல்லில் தண்ணீர் இல்லை. எனவே பக்கத்து ஊர் கிராமங்களில் இருந்து தண்ணீர் எடுத்து சின்டெக்ஸ் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும். கட்டேறிப்பட்டி கீழ ஊரில் ஆழ்குழாய் கிணறு சின்டெக்ஸ் பழுதாகி 2 வருடங்களாகியும் சரிசெய்யப்படவில்லை. அதனை உடனே சரிசெய்ய வேண்டும். எங்கள் ஊருக்கு தாமிரபரணி குடிநீர் கிடைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், உடனே தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக ஆழ்குழாய் அமைக்கப்படும். பழுதாகியுள்ள போர்வெல் சரிசெய்து தரப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.