மோட்டார் சைக்கிளில் வலம்வந்து நகை பறிப்பில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம்

மோட்டார் சைக்கிளில் வலம்வந்து நகை பறிப்பில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் போலீஸ் கமி‌ஷனர் அறிக்கை

Update: 2017-06-13 22:56 GMT

மதுரை

மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை தல்லாகுளம், அண்ணாநகர், கோ.புதூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிளில் வலம் வரும் 2 பேர், பெண்களிடம் தொடர் நகை பறிப்புச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் புகைப்படங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. இவர்களை நேரில் பார்த்தாலோ அல்லது இவர்களை பற்றிய தகவல் தெரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதன் மூலம், நகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பணியில் போலீசாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவர்களை பற்றிய தகவல் தெரிவிப்பவர்கள் தொடர்பான விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவர்களை பற்றிய தகவல் தெரிவிக்க, தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் செல்–952816693, அலுவலக எண் 0452–2538066, அண்ணாநகர் குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனரின் செல்–9442444952, அலுவலகம் 0452–2580359 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‘ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்