திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2017-06-13 20:00 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி

திருச்செந்தூரில் அமைந்து உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி 1995–ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரால் தொடங்கப்பட்டது. இளநிலை படிப்பில் 6 துறைகளையும், முதுநிலை படிப்பில் 7 துறைகளையும் கொண்டுள்ள இக்கல்லூரி என்.பி.ஏ. டி.சி.எஸ் அங்கீகாரம் மற்றும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.

தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சித்துறை, இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது. மேலும் லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு நடத்தும் தகுதியையும் பெற்றுள்ளது. மலேசியாவில் உள்ள மலேயா பல்கலைக்கழகம், லாஸ்வேகாஸ்சில் உள்ள நிவேதா பல்கலைக்கழகம், ஜெர்மனியில் உள்ள கேம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ மையம், ஓகியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகம், ஜப்பானில் உள்ள சிசுகோடா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமும் பெற்றுள்ளது.

ஆய்வகங்கள்

பொறியியல் படிப்பில் கட்டடிவியல் துறை, இயந்திரவியல் துறை, கணினித்துறை, மின் மற்றும் மின்னணு துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பில் கணினிதுறை, தகவல் தொழில்நுட்பத்துறை, ஆற்றல்சார் மின்னணுவியல் மற்றும் டிரைவ்ஸ், அமைப்புசார் பொறியியல், வி.எல்.எஸ்.ஐ. வடிவமைப்பு பொறியியல் மற்றும் வணிக நிர்வாகத்துறை ஆகிய பிரிவுகள் இந்த கல்லூரியில் உள்ளன.

ஒவ்வொரு துறைக்கும் செய்முறை ஆய்வகங்கள், அனைத்து துறைக்கும் பொதுவான மைய நூலகம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூலகங்கள் உள்ளன. இக்கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும் மற்றும் முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியின் கணினி துறைக்கு ஆராய்ச்சி மையத்திற்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

திறனாய்வு தேர்வு பயிற்சி

இக்கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்த பேராசிரியர்கள் சிறந்த முறையில் பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். மாணவர்களின் வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயிற்சி அளிக்க, வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் விவரம், அங்கு வேலை செய்வதற்கு உண்டான சூழல், சவால்களை சமாளிக்க கூடிய திறன் போன்றவற்றை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் வளாக தேர்வில் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வாரந்தோறும் திறனாய்வு தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

இந்த கல்லூரியில் ஆடவர்களுக்கு 2 விடுதிகளும், பெண்களுக்கு 1 விடுதியும் உள்ளன. கல்லூரியில் இருந்து அருகாமையில் உள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கல்லூரி வளாகம் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு வசதி மற்றும் இணைய வசதி செய்து தரப்பட்டுள்ளது. விடுதி வளாகம் முழுவதும் இணைய வசதி மற்றும் கணிப்பொறி ஆய்வகமும் கொண்டுள்ளது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான வசதியும் செய்து தரப்படுகிறது.

இந்த கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான துறையில் சேர்வதற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் 04639–245854, 242482 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்