பிறந்தநாளையொட்டி மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு
மார்ஷல் நேசமணியின் பிறந்தநாளையொட்டி மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகர்கோவில்,
குமரித்தந்தை மார்ஷல் நேசமணியின் பிறந்தநாள் விழா குமரி மாவட்டத்தில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது விஜயகுமார் எம்.பி. உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர். மேலும் மார்ஷல் நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சி
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள மார்ஷல் நேசமணியின் முழு உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர்கள் வக்கீல் ராதாகிருஷ்ணன் (கிழக்கு), ராஜேஸ்குமார் (மேற்கு) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன் சாலமன், அந்தோணிமுத்து, ஜெயகுமார், குமரி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) சார்பில் மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. இதற்கு குமரி மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மணிமண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் மாநில தலைவர் என்.ஆர்.தனபால் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் ஆசைத்தம்பி, இளைஞர் அணி அமைப்பாளர் அரசன், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ரெஜிசிங் நாடார், துணைச் செயலாளர் சாமுவேல், மேற்கு மாவட்ட தலைவர் ஜான்சன், செயலாளர் பாபு டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினரும் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் தியாகிகள் சிலரும் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தனர்.