டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய் தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், கலால் துறை துணை ஆணையர் வெங்க டேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு வாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதை சம்பந் தப்பட்ட துறை அதிகாரி களுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக் கை எடுக்க கலெக்டர் உத்தர விட்டார்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவை சிங்காநல்லூர் பகுதி விவசாயிகள் வாழை மரக்கன்று, மக்காச்சோள பயிர், இளநீர் மற்றும் காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷமிட்டபடி வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை அமைக்கப்படுவதை கண்டித்து திடீரென்று ஆர்ப் பாட்டம் செய்தனர். இது குறித்து அவர்கள் கூறிய தாவது:-
சிங்காநல்லூர் -வெள்ளலூர் ரோடு வேலன் நகர் குளத்தேரி செல்லும் ரோட்டில் விவசாய நிலத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு மதுக்கடை அமைக்கப் பட்டால், அதை சுற்றி உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
வறட்சி காரணமாக கருகும் பயிர்களை காப்பாற்ற போதிய தண்ணீர் வழங்க அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில் லை. ஆனால் மதுபான பிரியர்கள் குடிப்பதற்கு தாராளமாக மதுபானம் கிடைக்கிறது. இதற்கு அரசும் துணை போகிறது. எனவே தான் நாங்கள் வாழை, மக்காச்சோள பயிருடன் வந்து போராட்டத்தில் ஈடுபட் டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தனர்.
மதுக்கடையை மூட வேண்டும்
சிங்காநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி 61-வது வார்டு ஒண்டிப்புதூர் பட்டணம் இட்டேரி ரோட்டின் அருகே கடந்த 8-ந் தேதி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள சிந்துநகர், சேரன்நகர், குமரன் நகர், சாஸ்திரிநகர், ராமச்சந்திரா நகர், திருவள்ளுவர்நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட குடியிருப் புகளுக்கு செல்ல பெண்கள் மற்றும் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளா கின்றனர். மேலும் இரவு நேரத்தில் வருபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த மதுக்கடையை உடனடியாக மூடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
அனுமதி வழங்கக்கூடாது
காரமடை அருகே உள்ள கெம்மாரம்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சீளியூர் செல்லும் ரோட்டில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் பணி வேகமாக நடந்து வரு கிறது. ஏற்கனவே எங்கள் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளியங்காடு, தோலம் பாளையம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் மதுக்கடை திறக்கப்பட்டால், மக்களுக்கு அதிகளவில் இடையூறு ஏற்படும்.
மேலும் தற்போது மதுக் கடை அமைக்கப்படும் இடத் தின் அருகே கோவில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள், பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே எங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.