கள்ளக்குறிச்சியில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையத்தை மூடக்கோரி கள்ளக்குறிச்சியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் உள்ள கோட்டைமேடு மற்றும் நேப்பால் தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்கள் பலரும் தங்களது வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பெற்று வந்தனர். இந்த நிலையில் கோட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையமானது தினந்தோறும் ஆழ்துளை கிணறு மூலம் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இதனால் கோட்டைமேடு, நேப்பால் தெருக்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் வறண்டு விட்டது. இதனால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையத்தை உடனே மூடக்கோரி திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையத்தால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. மேலும் எங்களது வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் நாங்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம்.
போக்குவரத்து பாதிப்பு
குடிநீருக்காக நாங்கள் அருகில் உள்ள நகர் பகுதிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதை தவிர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையத்தை உடனே மூடவேண்டும் என்றனர்.
இதையடுத்து போலீசார், உங்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்ற பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.