கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
புதுவை கிழக்கு கடற்கரையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தமிழக அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி பொதுமக்கள் தாக்கினார்கள்.
புதுச்சேரி,
இதில் அந்த பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
விபத்து
புதுவை ஒதியம்பட்டு வில்லியனூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். புதுவை கிழக்கு கடற்கரைசாலையில் அவர் சென்றபோது சென்னையில் இருந்து புதுவை வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் தமிழக அரசு பஸ் ஒன்று முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் முருகன் படுகாயம் அடைந்தார். முருகனின் மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதமடைந்தது. படுகாயமடைந்த முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஸ் கண்ணாடி உடைப்பு
இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய தமிழக அரசு பஸ்சை சுற்றி வளைத்து பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் உச்சகட்டமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகள் பயத்துடன் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து அவசரம், அவசரமாக கீழே இறங்கினார்கள்.
அதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் பஸ்சில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் கற்களால் அடித்து நொறுக்கினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதுவை வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அதன் பின்னர் கல்வீச்சில் சேதம் அடைந்த பஸ் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் பரபரப்பு நிலவியது.