காஞ்சூர்மார்க்கில் கழிவறையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

காஞ்சூர்மார்க்கில் கழிவறையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

Update: 2017-06-11 22:15 GMT

மும்பை,

காஞ்சூர்மார்க்கில் கழிவறையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

பெண் குழந்தை

மும்பை காஞ்சூர்மார்க் மேற்கு அனுமான்நகரில் பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறையின் பெண்கள் பகுதியில் சம்பவத்தன்று பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. கழிவறைக்கு வந்திருந்த பெண்கள் பார்த்தபோது, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று வீரிட்டு அழுது கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே காஞ்சூர்மார்க் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சயான் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணை

அங்கு நடத்திய பரிசோதனையில், குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையை கழிவறைக்குள் போட்டு சென்றது யார் என்பது தெரியவில்லை. அந்த பகுதியில் அண்மையில் பெண்கள் யாராவது பிரசவித்தார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குழந்தையை போட்டு சென்றவர்களை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்