எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகஅரசு ஒத்துழைப்பு தரவில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகஅரசு ஒத்துழைப்பு தரவில்லை என்று தஞ்சையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர்,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறிய தமிழகஅமைச்சர் மட்டுமின்றி மொத்தமாக எல்லோரும் ராஜினாமா செய்தால் ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். காரணம் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தருகிறோம் என்று மத்தியஅரசு சொல்லி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதால் தான் தாமதம் ஆகிறது. இது தவறான முறையாகும். ஒரு திட்டம் வருகிறது என்றால் அதன்மூலம் எத்தனை மக்கள் பயன்பெறுவார்கள் என்பது முக்கியம்.
இந்த பகுதி, அந்த பகுதி என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு மக்கள் பயன்பெறுவார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.
இனிமேலாவது கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று இடத்தை முடிவு செய்வது தமிழகஅரசின் கடமை. எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர 100 சதவீதம் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் தமிழகஅரசு ஒத்துழைப்பு தரவில்லை. இனியாவது ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும். தமிழகத்தில் வசதி இல்லாமல் எந்த இடமும் கிடையாது. எந்த இடத்திலும் ஆரம்பிக்கலாம்.
தி.மு.க. என்ன செய்கிறது
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை மையமாக கொண்டு மத்தியஅரசு செயல்படுகிறது என்று சொன்னால் தமிழகஅரசு எதை வைத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இங்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க. என்ன செய்து கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகள் ஓட்டுபோட்ட மக்களை திராவிட இயக்கங்கள் ஏமாற்றி இருக்கின்றன. மழை பொய்த்துபோனால் என்ன செய்யலாம் என மாற்று ஏற்பாடு செய்யவில்லை. எத்தனை தடுப்பணைகள் கட்டி இருக்கிறார்கள். மத்தியஅரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டு தொகையை கூட வாங்கி கொடுக்கவில்லை. தமிழக விவசாயிகளுக்கு திராவிட இயக்கங்கள் துரோகம் செய்துவிட்டன. மத்தியஅரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. அந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது தமிழகஅரசின் கடமை. அதை செய்ய தவறிவிட்டனர்.
பா.ஜனதா ஆட்சி
காவிரியில் தண்ணீர் வராமல் இருப்பதற்கு முழு காரணம் தி.மு.க. தான். அவர்கள் தான் கோர்ட்டில் போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்றார்கள். பல நிலையங்களில் திராவிட இயக்கங்கள் காவிரி பிரச்சினையில் துரோகம் செய்துவிட்டன. குறிப்பாக தி.மு.க. ஏராளமான துரோகங்களை செய்து இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக உழைத்து கட்சியை பலப்படுத்தி கொண்டு இருக்கிறோம். தமிழக மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பூமிக்கு அடியில் இருந்து எடுக்கக்கூடிய எந்தவொரு பொருளாக இருந்தாலும் அது அந்த பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் என்று சொன்னால் அதை செய்ய தயாராக இருக்கிறோம்.
பெட்ரோல், எரிவாயு நம் பகுதியில் கிடைக்கிறது. நம் பகுதி மக்களுக்கு லாபம் கிடைக்கிறதா? ஓ.என்.ஜி.சி. எடுக்கக்கூடியவற்றில் 80 சதவீதம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணனை சென்னை துறைமுக கழக இயக்குனர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.