டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற 2 பேர் கைது
டாஸ்மாக்கடை ஊழியர்களை மிரட்டி ரூ.ஒரு லட்சத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்,
மதுரையை அடுத்த கூடக்கோவிலில் டாஸ்மாக்கடை உள்ளது. திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாததால், கூடக்கோவில் டாஸ்மாக்கடையில் அதிக அளவு மதுபாட்டில்கள் விற்பனையாகின்றன. அதில் பெரிய ஆலங்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டியன் (வயது 37) உள்பட 5 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கீரைத்துறையை சேர்ந்த முருகவேல் (36), கூடக்கோவிலை சேர்ந்த குமார் (36) உள்பட 7 பேர் டாஸ்மாக்கடைக்கு வந்தனர். அவர்கள் கடையில் இருந்த முத்துப்பாண்டியிடம் தங்களுக்கு மாமூல் தர வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர். அதில் டாஸ்மாக்கடை ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கத்தியை காட்டி மிரட்டிய 7 பேரும் தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று கூறிவிட்டு சென்றனராம்.
பணம் பறிப்பு
இதையடுத்து முத்துப்பாண்டியன் உள்பட 5 பேர் டாஸ்மாக்கடையில் விற்பனையான பணத்துடன் மேலஉப்பிலிக்குண்டு விலக்கில் நின்றிருந்தனர். இதையறிந்து அங்கு வந்த முருகவேல், குமார் உள்பட 7 பேர், முத்துப்பாண்டியனையும், மற்றவர்களையும் மிரட்டி பணத்தை பறித்து சென்றனராம். மேலும் மறுநாள் வரும் போதும், மாமூல் பணம் தர வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து முத்துப்பாண்டியன் கூடக்கோவில் போலீசில் டாஸ்மாக்கடை பணம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்று விட்டதாக புகார் கூறினார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று மீண்டும் வந்த முருகவேல், குமார் உள்பட 7 பேர் தங்களுக்கு மாமூல் பணம் அல்லது மதுபாட்டில்கள் தர வேண்டும் எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும், விரைந்து வந்த அவர்கள் டாஸ்மாக்கடையில் தகராறு செய்து கொண்டிருந்த 7 பேரையும் சுற்றி வளைத்தனர். அதில் முருகவேல், குமார் மட்டும் பிடிபட்டனர். மற்ற 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.