துரித உணவக ஊழியரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே துரித உணவகத்தில் இறைச்சி குறைவாக உள்ளதாக கூறி ஏற்பட்ட தகராறில் ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-06-10 22:31 GMT
செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஆனந்த் (வயது 30). இவர் அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய உணவகத்தில்  வடமாநிலத்தை சேர்ந்த ரத்தர் (34) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உணவு சாப்பிடுவதற்காக 3 பேர் துரித உணவகத்துக்கு வந்தனர்.

அப்போது உணவில் இறைச்சி குறைவாக உள்ளதாக கூறி தகராறில் ஈடுபட்டனர் பின்னர் அது கைகலப்பாக மாறியது.

தாக்குதல்

 சாப்பிட வந்த 3 பேரும் ஆத்திரம் அடைந்து உணவு சமைக்க வைத்திருந்த கரண்டியை எடுத்து ஊழியர் ரத்தரின் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அங்கு இருந்தவர்கள் ரத்தரை   மீட்டு      சிகிச்சைக் காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

 ரத்தரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்