நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவரின் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
நாகப்பட்டினம்,
1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் உட்பிரிவுகளின் கீழ் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும், அதாவது திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்பகுதி வரையில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிற 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். நாகை மீனவர்கள் நாகை கடுவையாற்றில் தங்களது விசைப்படகுகளை நிறுத்தி வைத்து மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படகு தீப்பிடித்து எரிந்தது
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் பாலச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென பரவி படகு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் படகில் இருந்த மீன்பிடி வலைகள் உள்பட மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் படகு மற்றும் படகில் இருந்த மீன்பிடி சாதனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து நாகை தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.