கிராமப்புறங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்க திட்டம் அமைச்சர் பேச்சு
கிராமப்புறங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி மூலம் ரூ.75 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட எரிவாயு தகன மேடை திறப்பு, இரட்டை மலை சீனிவாசன் பேட்டை, சின்னக்கடை தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பராமரிப்பு மேம்பாட்டு நிதியில் ரூ.19½ லட்சத்தில் அமைக்கப்பட்ட 3 உயர் கோபுர மின்விளக்குகள், ஆரிப் நகர், இந்திராநகர், அவுசிங்போர்டு பகுதி-1 ஆகிய இடங்களில் பொது சுகாதார சமுதாய கழிப்பிடம், தூய்மை திட்டம் மூலம் ரூ.27 லட்சத்தில் கழிப்பிடம் கட்டும் பணி, பொது சுகாதார சமுதாய கழிப்பிடம், கவுதமபேட்டை, அவ்வைநகர், சாமியார்கொட்டாய் பகுதிகளில் ரூ.27 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டும் பணி, நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் செலவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு பணி என மொத்தம் ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான பணிகளின் தொடக்க விழா திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நகராட்சி ஆணையாளர் சே.அலாவுதீன் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் அசோக்குமார், நகராட்சி மேலாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நவீன எரிவாயு தகன மேடை, உயர் கோபுர மின்விளக்கு, சுகாதார வளாகம் புதுப்பித்தல் பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்து பேசியதாவது:-
காவிரி கூட்டு குடிநீர்
திருப்பத்தூர் நகராட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் செய்து உள்ளோம். இங்கு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. அரசால் திட்டம் போடப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கியதாக கூறினார்.
இந்த திட்ட மதிப்பீடு ரூ.1275 கோடியாகும். அவர்கள் தொடங்கிய பின் 8 சதவீத பணம் மட்டும் ஒதுக்கி திட்டம் நின்றுவிட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்சினையை போக்க நிதி ஒதுக்கி தர வேண்டும் என ஜெயலலிதாவிடம் கேட்டு, உடனடியாக பணம் ஒதுக்கி 2016-ம் ஆண்டு தான் இந்த பணி முடிக்க முடிந்தது.
தற்போது வறட்சியிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு ஏற்பட அ.தி.மு.க. அரசு தான் காரணம். இந்த திட்டத்தை விரிவுபடுத்தி அரக்கோணம் வரை இப்போது காவிரி கூட்டு குடிநீர் தந்து வருகிறோம்.
கிராமப்புறங்களுக்கும்...
இப்போது 2-ம் கட்டமாக கிராமபுறங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்க திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. மேலும் திருப்பத்தூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வனரோஜா எம்.பி., ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் கார்த்திகேயன், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலாசுப்பிரமணியம், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சி.செல்வம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி ஆகியோர் பேசினர். முடிவில் நகர அபிவிருத்தி அலுவலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.